பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ரகுநாதன் ஆதியஞ் சோதியினை அறிந்தவன் நான் என்றேனா? அன்றென்னில் அன்றென்னும் ஆமென்னில் ஆமென்னும் இன்றென்னில் இன்றென்னும். இரண்டு கெட்ட தத்துவத்தை தன்றென்று நம்புவதே நமக்குப் பிழைப்பென்று என்றேனும் சொல்லியுமை ஏமாற்றிப் போட்டேனா ? , இன்னும் கேள்; சாதி சமயமென்றால்: சதியென்றால் ; ஆரியரின் சூ தென்றால், என் கருத்தைச் சொல்லுகிறேன், வீடணன்போல் நீதியால் வந்த தொரு நெடுந்தரும் நெறியல்லால் சாதியால் வந்ததொரு சிறு நெறியை யானறியேன். எந்தனுக்கோ- பரசேந்திப் பலபேரைப் பகைத்தாலும், வில்லேந்தும் அரசருருக் கொண்டாலும், அறநெறியை மறவாமல் நீ திவழி நின்றக்கால் நிச்சயமாய் அவனுமொரு வேதியன்தான்! யானுரைத்த வேதப்பொருள் இதுதான்!