பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கிந்தா காண்டம் ; வாலி வதைப்படலம்' பாடல் 112,

  • சென்ற இடத்தாறே... வள்ளுவனார்”-குறிப்பு : குறள் 422.

பாரதி திருநாள் 12.--9-1949 அன்று கோவை திரு. ஜி. டி. நாயுடுவின் முயற்சியால் கோவையில் நடைபெற்ற பாரதி விழா நிகழ்ச்சி களில் கவியரங்கமும் ஒன்று. அந்தக் கவியரங்கில் பல கவிஞர் களும் தமது கவிதைகளை அரங்கேற்றினார்கள். இந்தப் பாடல் அங்கு விசித்திரமாக அரங்கேற்றப்பட்டது. இக் கவியரங்கில் கவிராயரும், திரு. கு. அழகிரிசாமியும் 'இரட்டையர்' ஆகத் தோன் நீதி, 4. பழைய இரட்டைப் புலவரின் வழியைப் பின் பற்றித் தமது கவியை அரங்கேற்றினார்கள். அதாவது பரஸ்பரம் இரு வரும் ஒருவர் அடியெடுத்துக் கொடுக்க, மற்றவர் முடித்துக் கொண்டு வந்தார். முதல் பாட்டின் முதல் இரண்டு அடியும் கவிராயர் பாடியவை. இவ்வாறு அடியெடுத்துக் கொடுத்த உசாடலை முடித்ததோடு மறு பாடலுக்கு அடியெடுத்துக் கொடுத்த வர் கு. அழகிரிசாமி. அதாவது முதல் பாட்டின் பின் இரண்டு அடிகளும், இரண்டாம் பாட்டின் முதல் இரண்டு அடிகளும் அழ கிரிசாமி பாடியவை. அடுத்துவரும் நான்கு அடிகளும் கவிராயர் பாடியவை. இவ்வாறு இருவரும் மாறி மாறிப் பாடிக்' கவிதை யைப் பூர்த்தி செய்தனர். நாவலிக்கும் --- நாவலோசை இடும்; கோஷ மிடும். இடைசெவல்-கோயில் பட்டிக்கு அருகேயுள்ள கிராமம் ; - கு. அழகிரி சாமியின் சொந்த ஊர். புட்டா ஜரிகை-பூவேலைப் பாடுகள் நிறைந்த ஜரிகைப் பட்டு. வே-திருநெல்வேலி வழக்கு. வாரும் பிள்ளாய், எழுத்தாளரே! 1946-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் மகா நாட்டுச் சமயத்தில் பாடியது. இதற்கு முன் 1943-ம் ஆண்டில் கோயமுத்தூரில் முதல் மகா நாடு கூட் டப்பெற்றது. அந்த மகா நாட்டில் ஏராளமான எழுத்தாளர்கள்