பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வர்களும் உண்டு. இவ்வாறு சீறிச் சினந்த எழுத்தாளப் " பிர முகர்கள் சிலர் “ திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் மறைந்து கொண்டிருக்கும் 'ஆசாமி'யை இனம் கண்டுகொள்ள இயலாமல், “யார் இந்தக் கவிராயர் ?' என்று சினந்து குமுறி னார்கள். அவ்வாறு சினந்து குமுறிய எழுத்தாளர்களுக்குக் கவிராயர் தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையில் இந்தப் பாட்டு வெளிவந்தது. ஆராரோ...நானல்ல”-குறிப்பு: கம்பத்தின் கீழ் கண்டெ டுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கம்பன்..

  • ஈசன்... நானல்ல”-குறிப்பு : சேக்கிழார்.

"தம்பலத்தின்.., நானல்ல”-குறிப்பு: காளமேகப் புலவர்

  • கமிசனுக்கு...நானல்ல-குறிப்பு : அருணகிரிநாதர்.

திண்டு மிண்டு-ஏறுக்குமாறு. அழைப்பிதழ் நம் து நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலத்தில் நாட்டுப் பிரிவினையைப் பயன்படுத்திக்கொண்டு வகுப்பு வாதி களும் வெள்ளைக்கார அன்னியர்களும் வகுப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, எண்ணற்ற உயிர்களைப் பலிகொண்டு, நாட்டையே ரத்தக் களரியாக்கி வந்த வேளையில் எழுதப்பட்ட பாடல் இது கிடைத்த சுதந்திரத்தையும் நாட்டின் மதிப்பையும், நாட்டு மக்களின் வாழ்வையும் காப்பாற்றும் பணியில் . எழுத்தாளர் களின் கவனம் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தோடு. எழுதப்பட்டது. "கண்ட்ரோல் ... விடுபடவும்” - யுத்த காலம் தொட்டு நம் நாட்டில் நீடித்து வந்த 'காகிதக் கட்டுப்பாடு நீக்கப் பட்டபோது, புற்றீசல்போல் பல தமிழ்ப் பத்திரிகைகளை யாராரோ தொடங்கினார்கள். அது பற்றிய குறிப்பு இது.. ரோசனை : யோசனை. டங்கரிக்கும்: டங்காரம் செய்யும். பஞ்சநதிதீரம் : பஞ்சாப் பிரதேசம்.