பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வகுப்புவாதி சுட்டுக் கொன்றுவிட்டான். காந்திஜி சுடப்பட்டு மாய்ந்த 30-1-1948 அன்று பாடிய பாடல் இது. சங்கமம் “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் , மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் ” என்று 1.6ாடிச் சென்றான் பாரதி. பாரதி கண்ட கனவைப் போலவே ருஷ்ய மக்கள் தங்கள் நாட்டிலுள்ள வால்கா, டான் என்ற இரு நதிகளை இணைக்கவேண்டும் என்று கனவு கண் டார்கள். இந்தக் கனவை நனவாக்கத் திட்டம் தீட்டியது ருஷ்ய அரசாங்கம். திட்டமிட்டு 1952-ம் ஆண்டு மே மாத இறுதியில் இரு நதிகளையும் இணைத்து முடித்து விட்டார்கள். இந்த இணைப்பின் மூலம் ஐந்து கடல்களே இணைக்கப்பட்டு விட்டன். வெண் கடல், பால்டிக் கடல், அஸோவ் கடல், காஸ்பியன் கடல், கருங்கடல் முதலிய ஐந்து ஜல சமுத்திர ங்களும் இணைந்து போக்குவரத்து முதலியன பெருகியுள்ளன. மேலும், இந்த வால்கா -டான் நதிகளின் சங்கமம் ருஷ்ய நாட்டில் புதிய புதிய நகரங்களையும், வயல் வெளிகளையும் கனித் . தோட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுக் காலத்துக்குள் திட்ட மிட்டு நிறைவேற்றிய இந்த அற்புத சாதனையைப் பற்றிய செய்திகளைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வில் பிறந்த கவிதைதான் 'சங்கமம்', நாட்டு மக்களின் ஐக்கிய பலமும் மக்களாட்சியும் நிலைபெற்ற ஒரு நாட்டில் மக்கள் எத்தளை மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதற்கு வால்கா- டான் இணைப்பு கண்கண்ட சாட்சியம் ஆகும். இந்தப் பாடல் 1952-ம் ஆண்டில் எழுதியது. கூச் பீஹாரில் கொலையுண்ட குமரிக்கு 1951-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூச் பீஹாரில், உணவு வேண்டுமென்று கோரி அரசாங்கக் காரியாலயத்துக்கு அணி வகுத்துச் சென்ற நாட்டு மக்கள் மீது வங்க அரசாங்கப் போலீ ஸார் அநியாயமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய் தார்கள்