பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18+ அந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு இளம் கன்னிப்பெண் குண்டுபட்டு உயிர் துறந்தாள். நீசத்தனமான இந்தத் துப் பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து எழுந்த கவிதை இது. 1951-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்றியது. பாடல் 2; யுத்த காலத்தில் நிகழ்ந்த வங்கப் பஞ்சம் பற்றி? குறிப்பு : பாடல் 4 : அப்போது உணவு மந்திரியாக இருந்த முன்ஷியாம் தொடங்கிவைத்த 'வனமகோத்ஸவம்' பற்றிய குறிப்பு.. பிள்ளை இதோ பிள்ளை ! 1952-ம் ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் பஞ்ச நிலைமை தாண்டவமாடியது. பஞ்சத்தின் கோரத்தால் பற்பல பட்டினிச் சாவுகளும், தாய்மார்கள் குழந்தைகளையும் கற்பையும் மானத்தையும் விலைபேசும் கோரமும் நிகழ்ந்து வந்ததும் நாம் அறிவோம். பெற்றெடுத்த குழந்தைகளைத் தாய்மார்கள் காய் கறிபோல் விலைகூறி விற்ற நாட்டின் இழி நிலைமையைக் கண் டெழுந்த உணர்வில் உருவான பாடல் இது. பெற்றெடுத்த தாயே குழந்தையை விலை கூறுவதாக அமைந்துள்ளது பாட்டு. 1952-ம் ஆண்டில் எழுதியது. ஓராட்டு : தாலாட்டு (திருநெல்வேலி வழக்கு) அன்னை தமிழ்த் தாயகமே வெல்க, வெல்க! இந்திய நாடு சுதந்திரமடைந்த பின்னும் இந்திய நாட்டின் கரையோரங்களிலே அன்னியத் திட்டுப் பிரதேசங்கள் இருந்து வந்ததையும்-இன்னும் கோவா போன்ற போர்த்துகீசியப் பிரதேசங்கள் இருந்து வருவதையும் நாம் அறிவோம். நமது தமிழ்த் தாயகத்தை ஒட்டியிருந்த பிரஞ்சு இந்தியப் பகுதிகன் தாய்த் தமிழகத்தோடு இணையவேண்டும் என்ற கிளர்ச்சி 1954-ம் ஆண்டு முற்பகுதியில் தீவிர மடைந்ததும், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் இந்த இணைப்புக்கான அறப் போர் உச்ச நிலையை அடைந்ததும், இந்தப் போரில் மக்கள் வெற்றி பெற்றதும் நாம் அறிவோம். "தாய்த் தமிழகத்திலிருந்து