பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அன்னிய அரசியல் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற இந்த அறப்போர் தீவிரமடைந்துவந்த வேளையில் எழுதிய பாடல் இது. 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதியது. ஜராசந்தன் : இவன் ஒரு புராண பாத்திரம்; மகாபாரதக் கதையில் வருபவன். இவனை இரண்டு கூறாகப் பிளந்து கொன்றாலும், பிளந்த கூறுகள் மீண்டும் ஒன்றுபட்டு அவன் உயிர்பெற்று எழுந்து விடுவான் எனக் கதை. வாழிநீ கொரிய நாடே 1 கொரிய நாட்டில் கொரிய மக்களுக்கும் அமெரிக்க யுத்த வெறியர்களுக்கும் நடந்த யுத்தம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. 'சின்னஞ் சிறு நாடான கொரியர், உலகத்தின் மாபெரும் ஏகாதிபத்தியமான அமெரிக்கரின் ஆதிக்கத்தைப் பல வருஷக் கணக்காக எதிர்த்து நின்றது மட்டுமல்லாமல், தனது நாட்டின் எந்தப் பகுதியையும் ஆதிக்க வெறியர்களின் கையில் அகப் படாமல் காப்பாற்றியது மாபெரும் வீரசாதனை என்றுதான் சொல்லவேண்டும். முதல் உலக யுத்தத்தில் சின்னஞ் : சிறு பெல்ஜிய நாடு ஏகாதிபத்தியத்துக்கு இரையாகியது. பெல் ஜியத்தின் வீழ்ச்சியை 'அறத்தின் வீழ்ச்சி' என்று பாரதிகூட, தனது 'பெல்ஜியத்திற்கு வாழ்த்து' என்ற பாட்டில் வாழ்த்திச் சென்றான். ஆனால், கொரிய மக்களோ பெரும் ஏகாதிபத் தியத்தை எதிர்த்து , நிற்பதில் வெற்றிகண்டு விட்டார்கள். காரணம் கொரிய நாட்டு மக்களின் ஐக்கிய பலம் தான். எத்தனை அணு குண்டுகள், ஹைட்ரஜன் குண்டுகள் தோன்றிய போதி லும், நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு நின்றால், எந்த நாச சக்தியும் அவர்களை அழித்துவிட முடியாது என்பதுதான் சின்னஞ் சிறு நாடு உலகத்துக்கே கற்றுத் தந்துள்ள ஞானபாடமாகும். இந்தப் பாடல் வீரச் சமர்புரிந்த கொரிய மக்களை வாழ்த்தும் வகையில், 1952-ம் ஆண்டு இறுதியில் எழுதப்பட்டது. செந்தழல் குழம்பின் குண்டு--நப்பாம் குண்டுகள் (Napalm) கோஜே: அமெரிக்கர்கள் கொரிய நாட்டின் யுத்தக் கைதி களைச் சித்திரவதை செய்த சிறைக் கூடம் இருந்த தீவு.