பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 சமாதானம் 1951-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21, 22 தேதிகளில் பேரா சிரியர் டி. டி. கோசாம்பி தலைமையில் சர்வகட்சி சமாதான மகா நாடு கூடியது. அந்த மகா நாட்டின்போது இயற்றப் பெற்று, மகா நாட்டுக் கலையரங்கில் அரங்கேற்றப்பட்ட பாடல் இது. பாடல் உருவம் கானமும் கோஷமும் இணைந்து ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டதாகும், கலாசார சுதந்திர' மகாநாட்டில் கலந்து கொண்ட எழுத்தாளனுக்கு நாட்டை மட்டுமல்லாமல் நமது ஆத்மாவையுமே விலைக்கு , வாங்க, முயன்றுவந்த அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் ஆதரவில் நம் நாட்டில் 'ஜன நாயக ஆராய்ச்சி' என்றும், 'கல! சார சுதந்திரம்' என்றும் கூறி நமது சகோ தர நாடுகளான சீனா, ருஷ்யா போன்ற நாடுகளின் மீது துஷ்பிரசாரமும், புத்த வெறிப் பிரசாரமும் செய்துவந்த 'கழகங்களைப் பற்றி நாம் அறி வோம். இந்த "ஜன நாயக ஆராய்ச்சி" வலையில் அற்ப ஆசை களின் காரணமாகத் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சிலரும் சிக்கி யிருந்ததையும் நாம் அறிவோம். இத்தகைய கலாசார சுதந்திர மகா நாடு ஒன்று 1953ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் கூட்டப்பட்டது. அமெரிக்கப் பிரசாரத்துக்கே பயன்படுத்தப் பட்ட. இந்த மகா நாட்டில் தமது ஆத்மாவையே விலைக்கு விற்று விட்டுக் கலந்துகொண்ட சில தமிழ் - எழுத்தாளர்களுக்காக இயற்றப்பட்ட' பாடல் இது. 1953-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எழுதியது, மீட்டத் திரண்டெழுவோம் பாரதியின் பாடல்களை சென்னை அரசாங்கம் விலைக்கு வாங்கி நாட்டின் சொத்து ஆக்கிய பின்னும், பாரதியின் பாடல் களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்துக்குக் கட்டணங்கள்