பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கட்ட வேண்டும் என்று விதி விதித்திருந்ததையும், இதை எதிர்த்துத் தமிழக மெங்கணும் கிளர்ச்சி நடந்து வந்ததையும் இந்தக் கிளர்ச்சியின் பயனாக ஆறு ஆண்டுக் காலமாக அரசாங் கத்தின் உடைமையாக இருந்த பாடல்களை, 1955-ம் ஆண்டு மார்ச் மாதம் மக்களுக்கு உடைமை யாக்கியதையும் நாம் அறிவோம். இந்தப் பாடல் பாரதி பாடல்கள் விடுதலைக் கிளர்ச்சியின் ஒரு பகுதியாக, 1953-ம் ஆண்டு செப்டம்பர் மா தம் பாரதி தினத்தை ஒட்டி இயற்றப்பட்டதாகும். இன்பப் பொங்கல் இந்தப் பாடல் பொங்கல் தினத்தை ஒட்டி, 1956-ம் ஆண்டு ஜனவரியில் இயற்றப்பட்டது. """கந்தையா 1...” இந்தப் பாடல் கவிராயரின் நண்பரான திரு. எஸ். கந்த சாமியின் திருமணத்தின்போது எழுதி அனுப்பிய வாழ்த்துப்பா திரு. கந்தசாமி, கவிராயரின் கல்லூரித் தோழர்; கவிஞரும் கூட. 'துறைவன்' என்ற புனை பெயரில் மறைந்து கொண்டு, அருமை யான கவிதைகள் பலவற்றை எழுதி வருபவர், இவர் திருச்சி அகில இந்திய ரேடியோவில் பணியாற்றுகிறார். இவரது திரு மணம் நாகர் கோயிலில் நிறைவேறியது. திருமணத்துக்கு நேரில் செல்ல வசதிப்படாமையால், இந்தக் கவிதைமூலம், தமது வாழ்த்தைத் தெரிவித்தார் கவிராயர், இந்தப் பாடல் 4-5-1947 அன்று எழுதப்பட்டது. முகம்-திருமுகம் : அ ழப்புக் கடிதம். தென் திசைக்கே---தமிழ் நாட்டின் தென் கோடியிலுள்ள நாகர் கோயிலுக்கே, பாலத்து-திருநெல்வேலி ஜங்ஷனுக்கு மற்றொரு பெயர் திரு நெல்வேலிப் பாலம் ; ரயில்வே நிலையம் ஏற்பட்ட பின்னர் இந்தப் பெயர் மாறி மங்கி விட்டது. தேபோல, கதை தொட்டாள்