பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சின்னத்தட்டாரத் தெரு வீட்டு மாடி-ஜங்ஷனிலுள்er? இந்தத் தெருவில்தான் கந்தசாமி தமது திருநெல்வேலி வாசத் தின்போது குடியிருந்தார். ஆற்று மணற்பரப்பில் - தாம்பிரவருணி ஆற்று மணற் படுகையில், அ. சீ, ரா.கந்தசாமியும் கவிராயரும் படித்துவந்த இந்துக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய திரு. அ. சீனிவாச ராகவன். அ. சீ. ரா. வைத் தமிழுலகம் நன்கு அறியும் ; பிரபல எழுத்தாளர். 'கண்ணம்மன் கோயில் கடைவீதி முச்சந்தி-இது திருநெல் வேலி ஜங்ஷனில் பரபரப்புள்ள ஒரு இடம், ராணி மங்கம்மா ரோடு - திருநெல்வேலி. ஜங்ஷனிலுள்ள மதுரை ரோடு. சென்னை - திருச்சியிலே-கவிராயர் சென்னையில் பத்திரிகைத் தொழிலிலும், கந்தசாமி திருச்சியில் வானொலி நிலையத்தி லும் பணியாற்றியதைக் குறிப்பிடுகிறது. வேளூர்க் கவிராயா !" இந்தப் பாடல் 1946-ம் ஆண்டு பொங்கல் தினத்தை ஒட்டி, 'வேளூர்க் கவிராயர் ' என்ற புனை பெயரில் கவிதைகள் எழுதி வந்த' “புதுமைப்பித்தனுக்குக் கவிராயர் எழுதியனுப்பியது. இந்தப் பாடல் பிறந்த கதை ரசமானது. கவிராயர் பொங்கல் தினத்தன்று 'பொங்கல் செய்தி' என்று மகுடமிட்டு, 'குட்டு தற்கோ பிள்ளைப் பாண்டியனார் இங்கில்லை' என்ற பழம் பாடலை அச்சிட்டு, பல எழுத்தாளர்களுக்கும் அனுப்பிவைத்திருந்தார் புதுமைப்பித்தனுக்கும் அவ்வாறு அனுப்பப்பட்டது. அந்தப் பாடலைப் படித்துப் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தன் கவிராய: ருக்கு இரண்டு பாடல்கள் எழுதி அனுப்பியிருந்தார். அத்த இரு பாடல்களைப் பார்த்துவிட்டு, புதுமைப்பித்தனுக்கு எழுதிய பாடல்கள் தான் இவை. ' '