பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் கதையைப் பொறுத்தவரை கற்பனை தான் ; என் கருத்தை விதையூன்றக் கிடைத்தவொரு விளை நிலம்தான்! அறியாமல் அதைப் பார்த்து சூழ்ச்சியென்றும் ஆரியரின் மாயையென்றும் குதியாட்டம் போடுவதில் குணமில்லை! என்றிட்டான் அதிமேதைக் கவிக்கப்பன். அடியேனும்- “ கம்பத் திருநாடா! ரொம்ப சரி, நின் வார்த்தை , பன்னு தமிழ்க்கவிதைப் பாவலனே! என்னுளத்தில் இன்னு மொரு சந்தேகம் இருப்பதனைத் தெளிவாக்கும் ஏதோ நீர்-- பாடி வைத்த காவியத்தில் பச்சோந்தி போன்று பலர் ஊடுசென்று போலிகளை. ' உருவேற்றி னாரென்றும், தேடியதை மாற்றுரைத்துத் தேர்ந்து பலபாட்டை ஏடுவிட்டு ஓட விட்டு ,

  • இதுதான் கம்பன்' என்று

பாடுகின்றார். நின் கருத்தைப் பகருவாய்” என்றுரைத்தேன்.