பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விருத்தாசலம்--புதுமைப்பித்தனின் இயற் பெயர், தோணியப்பர்-18-ம் நூற்றாண்டு தமிழ்ப் புலவர். பேருக்கா கலைக் கழகம் ? 1947-ம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள சில எழுத்தாளர் களும், கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்களும் அனுதாபிகளும் ஒன்றுகூடி, திருநெல்வேலியில் ஒரு முற்போக்குக் கலைஞர் கழகத்தைத் தோற்றுவிக்க முயன்றார்கள். அந்த முயற்சியின் பூர்வாங்கக் கூட்டத்துக்குத் தற்செயலாகப் போய்ச் சேர்ந்த கவிராயர். அந்த முயற்சியை வரவேற்று, அதனைக் காரிய சித். தியாக்கும் பணியில் ஈடுபட்டார் எனினும் பூர்வாங்க முயற்சியில் முன்னின்று பணியாற்றிய கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள், கலை ஞர் கழத்தை உருப்படியாக்கி உருப்பெறச் செய்வதில் போதிய அக்கறை கொள்ளவில்லை. அந்த நண்பர்களின் அசட்டைத் தனத்தைச் சுட்டிக்காட்டி, அவர்களைச் செயலாற்றத் தூண்டு வதற்காக எழுதப்பட்ட பாடல் இது. 1947-ம் ஆண்டில் எழுதியது. . ரத்தினமும்-கவிராயரின் நண்பர்களில் ஒருவரான ராஜரத்தி னம் என்பவர். கல்லத்தி முடுக்கு-திருநெல்வேலியிலுள்ள ஒரு சந்தின் " பெயர், வீராபுரம்--வீரராகவபுரம் என்ற பெயரின் பேச்சுப் பிரயோகம் வீரராகவபுரம் : திருநெல்வேலி ஜங்ஷனுக்குரிய மற்றொரு பெயர். மார்க்ஸ்-கம்யூனிஸ தத்துவ பிதாவான கார்ல் மார்க்ஸ்.' கார்ச் சங்கம்-மோட்டார் தொழிலாளர் சங்கம். வாணி விலாஸ் ஹோட்டல்-ஜங்ஷனிலுள்ள ஒரு ஹோட்டல், போணி (திருநெல்வேலி வழக்குச் சொல்) தினசரி முதன் முத லாக ஒரு கடையில் சாமான் வாங்குவது,