பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை நாள் ?.... இந்தப் பாடல் பிரபல மலையாளக் கவிஞரான மகாகவி வள் எத்தோ ள் எழுதிய ஒரு கவிதையின் தமிழாக்கம். வள்ளத்தோன் இந்திய நாட்டின் இன்றைய கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்த வர். தேச பக்தியும், முற்போக்கு எண்ணமும் கொண்ட சிறந்த கவி. இவர் மலையாள நாட்டின் ஆஸ்தான கவிஞராகவும் இருந்தவர் ; இந்திய இலக்கிய உலகில் நன்கு அறிமுகமான வர். இவரது கவிதைகள் புல் அன்னிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மேரி மக்தலேனாவைப்பற்றி இவர் எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. ரயிலில் சா தாரண. மாகக் காணக் கூடிய சிறு சம்பவத்தைக் கொண்டு, அசாதாரண மான மன உணர்ச்சிகளை இந்தப் பாடலின் மூலம் தூண்டி விடு கிறார் அவர். இந்தப் பாடல் 1952-ம் ஆண்டில் தமிழாக்கப் பெற்றது. மேரி மக்த மொழிகளிலும் விமான மகாத்மா இந்தப் பாடல் பிரபல ஜப்பானியக் கவிராயரான யோனே நோகுச்சி என்பவர் மகாத்மா காந்தியைப்பற்றி எழுதிய ஆங் கிலக் கவிதையின் தமிழாக்கம் ஆகும். யோனே நோகுச்சி. இத் தியாவுக்கும், தமிழ் நாட்டின் தலை நகரான சென்னைக்கும் கூட வந்து சென்றிருக்கிறார். இந்தியாவைப்பற்றி ஜப்பானிய மொழியில் ஒரு நூலும் எழுதியிருக்கிறார். இவரது கவிதைகள் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளள... இந்தியாவுக்கு வந்து காந்திஜியை நேரில் சந்தித்த இந்தக் கவிஞர் நமது தேசபிதாவுக்குச் சூடிய பாமாலையின் தமிழுருவமே இந்தப் பாடல், 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திஜியின் அமரத்துவ தினத்தை ஒட்டி இந்தப் பாடல் தமிழாக்கப்பட்டது" சாந்தி நிலவுக இந்தப் பாடலும் சமாதான இயக்கத்தின் முக்கியத்துவத் தைக் குறிக்கோளாகக் கொண்டு 1952-ம் ஆண்டில் இயற்றப்