பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் 8

  • சிற்றம்பலத் தானே ?

செப்புவதைக் கேள்மகனே ! செம்பொன் பணியூடே செம்பைப் புகுத்துவதும், அம்புலியின் மேனிதனில் அழுக்கேறிச் சேருவதும் நண்பன் மணிமிடற்றில் நஞ்சிறங்கிப் போனதுவும் கம்பன் கவியூடே கள்ளம் புகுந்ததுவும் வம்பு நிறைஉலகத்தே வளமுறைதான்! என்றாலும்- சாவிப் பதரினத்தை , சண்டு சருகதனைத் தூவிப் பிரித்தெடுக்கத் துணிவுமட்டும் போதாது ! இடைச்செருகல் என்றாலும் இடம் பார்த்து, பொருள் பார்த்துத் துடைச் செடுக்கத் தனிப்புலமை தோய்ந்திருக்க வேண்டுமையா! பாவிமக்கள் செய்வினையால் பரவிவிட்ட நஞ்சதனை ஆவிவிட்டுப் போகாமல் அறுத்தாற்ற வேணுமையா! என்றுரைத்தான்,

  • நன்று, நன்று,

இன்றைக்கு -