பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 , 9 குநாதன் கலையுணர்ச்சி தான் வேண்டும். அதுவற்று - பவிசாகப் பொய்ப்புலமைப் பகட்டும் குரலுக்குச் செவிசாய்த்து, செந்தமிழைச் சீரழிய வைக்காதீர்!... - கவிராயா 1 ஒன்று மட்டும் முடிவாக உரைக்கின்றேன் ; மாமேருக் குன்றெரிந்து வந்தாலும், கொடுஞ்சதிகள் செய்தாலும், மன்றேறி எனைப்பற்றி - வசைமாரி பெய்தாலும் கொன்றொழித்து எந்தனுக்குக் குழிதோண்ட ஏலாது ! கொள்ளிவாய்ப் பேய் போலே கும்பலிட்டு, என்மீது அள்ளி நெருப்பெடுத்து அறைந்தாலும், இடை சேர்ந்த கள்ளக் கவிதையெனக் கண்டகண்ட பாட்டையெலாம் கிள்ளி எறிந்தாலும், கீழ்த்தரமாய் என்கவியை எள்ளி நகையாடி ) எதிர்த்தாலும், இறப்பறியாத் துள்ளுகின்ற என்கவியைத் தூக்கேற்ற ஏலாது!