பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் சாகாத் தமிழ் மொழிக்குச் சஞ்சீவி யென்னவொரு மாகாவியம் செய்து . மண்ணில் நிலைபெற்றேன். தமிழுக்குக் கதிமோட்சம் தந்தேன் ; அம்மொழியை. அமிழ்தமெனச் சொல்லுதற்கும் அடிவாணம் போட்டமைத்தேன். ' ஆதலினால்- எமைப் பார்த்து யாரானும் ஏதேதோ சொன்னாக்கால் குமையாதீர்! எம்கவிதை குன்றின்மேல் இட்டதொரு குல விளக்கு ! வஞ்சகரால் என்றும் அணைத்திடற்கு ஏலாத பரஞ்சோதி;.

  • நின்றுஇனிப் பேசுதற்கு

நேரமில்லை, ஆதலினால் சென்று வருவ" னெனச் செப்பி மறைந்துவிட்டான் செல்வக் கவிச் சிங்கம்-எங்கள் கல்விக் கடல் வங்கம்! 1. 11 காரைக்குடி நகரின் கண்ணியரே! கம்பனது பேருரைகள் கூறவந்த ' பெரியோரே! அடியேனும் சீர்க்கம்பன் அடிபரவிச் : சென்று வருகின்றேன். 1949