பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் என் காதலன் - 1 நமஸ்காரம். காதற் கவிதைதனைக் - காதாரக் கேட்பதற்காய் மீதுற்ற பேராவல் மேவி யிவண் வந்தவரே! ஒருவார்த்தை -. மீசை முளைத்தவனை மின்னியலார் தன்னியல்பாய் ஆசையுற்று, நாயகிபோல் அபிநயித்து, அரங்கேறிக் கூசாமல், சற்றேனும் . குணங்காமல் பாவிசைத்துப் பேசிவிடு எனஆணை : பிறப்பித்து விட்டக்கால் பேச்சும் பிறந்திடுமோ ?--கவி மூச்சும் சிறந்திடுமோ ? கம்பனுக்கும் எந்தனுக்கும் காதல் முடி போட்டு வம்பிழைத்த செயலாளர் வார்த்தை கிடைத்த தென்று,

  • தம்பீ! ஒரு பாட்டு -

தயாராக்கி வா ' வென்றால் எம் பிழைப்பின் கோலத்தை