பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கூனல் இளம்பிறையின் கொதிப்போ ? நிலச்சூடோ மேனி புழுங்க, சிந்தை மேவிவரும் கற்பனையை ஏணி பிடித்தேறி எங்கோ திரிந்து வந்தேன். கற்பனைதான் ! என்றாலும் கம்பன் என் காதலன் தான்! கற்பவர்கள் கற்றவரைக் காமுறலும், கவிப்பிரியன் விற்பன்ன மேதைதனை விரும்புவதும் காதலின்பால் திற்பதுவே யாமன்றோ ஆதலினால்-- சொற்படிவ மானகம்பன் சொல் பழகும் எந்தனுக்கு நற்பயனாய் வந்த வொரு நாயகன்தான்! அவன் கவிதை நற்கவியின் காதலுக்கோர் தாயகம் தான்! நானோ~~ கள்னிக் கவிராயன்! : . கவிபாடும் வேட்கையினால் முன்னி யெழுந்தவெறி, மூண்டுத் தவிதவித்தேன். இன்ன வழி ஏது வழி என்றுவகை புரியாமல். பின்ன முற்றேன்; காதலெனும்