பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் பித்தம் சுரந்துவரும் கன்னி யிளம்பருவக் கனவைப் போல், அவ்வேளை என்னை, என்னுளத்தை ஏற்று மணம் புரிந்து . நன்னயம்தோய் கவிமகவு நல்குதற்கு ஏற்றவொரு மன்னவனை, கவிக்குலத்து மாராசன் மலர்க்கரத்தை எண்ணி, எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தேன் நான். அவ்வேளை- எண்ணரிய புலவரெலாம் எதிர்வந்தார் ; புன்னகைத்தார் ; பண்ணமைந்த பலபாட்டைப் பரிசங்கள் பேசிவந்தார் ! 'பெண்ணணங்கே! இளங்கவிதைப் பெட்டகமே! கவிபாட என்னைக் கலந்துவிடு!' என்றிட்டார்! அன்னவரோ- இலக்கணத்தைத் தூளாக்கி இடித்து, சூரணித்து, கலக்கிக் குடித்திறக்கிக் 'கவியென்று பேர்சுமந்து. பிலக்கணமாய்ப் பாடிவந்த பித்தர் சிலபேர்கள்.