பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் --- ... - . , -- -- -- -- --- --- -- குதிரையெனக் கொண்டாலும் குதிரையாய், குதிரை கெட்ட கழுதை யெனக்கொண்டாலும் கழுதையாய்த் தோற்றமுறப் பழுதை யென்றும் பாம்பென்றும் பகுத்தறியாப் பான்மையினில் இழுபறியாய், திரிபென்றும் (மகம் சிலேடையென்றும் கழையேறிக் கூத்தாடிக் காதல் விழைய வந்த உழைச் சேற்றுப் புலவோர்கள் ஒருசில பேர் ! அவரெல்லாம் --- சொல்லுக் குயிரைவிட்டு, சோ தாவாய் வார்த்தைகளை மல்லுக்கு எதிர் நின்று மடிபிடித் திழுத்துவந்து அடுக்கி, கற்குவியல் ஆக்கி. பல்லையெலாம் உடைக்கக் கவிபாடி உயர்கவிதை என்றுசொலிப் படைத்தார் ; கன்னி மனப் பாசம் விரும்பி நின்றார் ! பிஞ்சுக் களியுளத்தைப் பிணமாக்க, இத்தகைய தஞ்சுக் கவிஞர் குழாம் நயமாய் எனை நாடி , கொஞ்சிவிளை யாடியிளங் கோலம் குலைக்கவந்தார் !