பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 23 எந்தனுக்கோ - கன்னியே ஆனாலும் கவிதை இதுவென்று உன்னி உணர்தற்கும் உளத்தில் திறமுண்டு. சின்னஞ் சிறுபுலமை, செப்படிவித் தைப்புலமை, கன்னமிட்டுக் கவிதைதனில் கைவைக்கும் பொய்ப்புலமை, சன்னமாய்ச் செந்தமிழைச் சாகடிக்கும் வெறும் புலமை இன்னதென அறிவதற்கும் இதயத் தெளிவுண்டு! எனவேதான்- அன்னவரை என் மனப்பெண் அணைய விலை ; புலவரெலாம் பன்னிப்பல் சாகசங்கள் பகர்ந்தாலும், பணிந்தாலும் என்னுள்ளம் அன்னவரை ! ஏற்க விரும்பவில்லை, இப்படியாய்- வரிசை யிட்டு வந்தென்னை வதுவை புரியவந்த பரிசை கெட்ட வெறும் புலமைப் பாவலரின் கைமறுத்து, திரிசங்கு நிலைபோலத் திகைத்திருந்த வேளையிலே