பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ரகுநாதன் அரிச் சிங்கம் போல வந்து ஆட் கொண்டான் ஓர் புலவன் ! அன்னவன்தான்-. கொல்லும் இலக்கணத்தின் கொத்தடிமை ஆகாமல், சொல்லுக்குச் சொல் அழகு சுகமாய்ச் சுதிகூட்டக் கல்லும் கனிந்துருகக் கவிசொன்ன மாராசன்! சந்தத்தின் இங்கிதமும், செந்தமிழின் மெய்யழகும், சிந்தனையின் லட்சியத்தின் சிகரத்துப் பொன்னொளியும் தந்தெனக்கு என்னுளத்தைத் தன்னடிமை யாக்கிவிட்ட பொன்னடி யான் அந்தப் புலவர் திருக் கோமான்! பாவியலின் பண்பையெலாம் பண்ணமைப்பில், தான் படைத்த காவியத்தின் ஜீவியத்தில் காட்டிவிட்ட கம்ப்னவன், ஆவி குளிர வந்த அமுதக் கவிக் குமரன் கோவில் கண்டான்! என்மனமே குடி கொண்டான்!