பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 25 தோத்திரங்கள் பலபாடித் தொட்டறியா உண்மையினை, சாத்திரங்கள், கண்டறியாச் சத்தியத்தை , ராமகதைப். பாத்திரங்கள் மூலம் படைத்துவிட்ட கம்பனவன் நேத்திரங்கள் காணதென் நெஞ்சிற் குடிபுகுந்தான் ! காத்திருந்த என்னாசைக் கா தல்கை கூடிவர, பூத்திருந்த கன்னிமனம் புத்தேன் சுரந்தோட, நீத்திருந்த என் ஆர்வ நெருப்பு நிமிர்ந்தோங்க, பொங்கும் மனக்கன்னி பூரிக்க, புளகமுறச் செங்கை மலர்பிடித்தான் செல்லத் திருநாதன்! அன்றுமுதல் - இல்லாரும் உடையாரும் இல்லாத கோசலமாம் நல்லதொரு லட்சியம் சேர் நாட்டில் உலவி வந்தோம்! கங்கைக் கரைக்கதிபன் கானரசன் குகன் அளித்த . பொங்கு நுரை நறவும் புதுமீனும் உண்டு வந்தோம் !