பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கங்குல் இருள் அகலாக் கானகத்தே கல்லணைமேல் சிங்கநிகர் இளையோன் செய்தமைத்த சாலையினில் அங்கை தலைசாய்த்து அயர்ந்து சயனித்தோம் ! எங்கெங்கோ நாங்கள் இருபேரும் இதயத்தால் சங்கமித்தோம் ; கவிதைச் சாகரத்தில் முக்குளித்தோம் ! மேலும் அவன்-- தா $33த சொற்கேட்ட தனயன் திருவுளத்தில் சீதையம்மன் சோக ' சித்திரத்தில், ராமபிரான் பாத்மலர் சிரஞ்சுமந்த பா தன் அருங்குணத்தில் ஈதொத்த-- ஏதெவற்றி லெல்லாம் என்னை வயமாக்கிக் காதல் களிமயக்கில் கவிதைச் சுகம் கொடுத்தான் ! 8 தறியூடு பாவோடும் தன்மையிலே பின்னலுற்று முறிவற்ற பாநயத்தின் முயக்கில் கலந்தாலும், செறிதோறும் அவன் கவியைச் சிந்தையினில் தெளிதோறும்