பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் அறிதோறும் அறிதோறும் அறியாமை கண்டறிந்தேன் புரியாத புதிரெல்லாம் புரிய, மேன்மேலும் விரிவான ஆனந்தம் விகசித்து மேலோங்க அரிதான புத்தமுதம் அளித்தான் ; களிப்பித்தான்! இன்று இருப்பதுபோல் என்றும் இருந்ததிலை, இன்னே யிருப்பதுபோல பின்னே இருப்பதிலை என்னும் படியாக, வேட்ட பொழுதெல்லாம் விருப்பம் அவையவைபோல் பாட்டின் உயிர் மூச்சை, பாவோடும். கவிச் சுவையை ஈட்டி, அவன் தந்த. இன்பில் தோய்ந்திருந்தேன், அந்தரங்க மாகஎந்தன் அருமைத் திருக்கம்பன் சுந்தரனார் தம்மோடு சுகம் கண்ட இன்கவிதைக் காதலனு போகத்தில் கழறிக் குழறுமொழி ஓதப்படுமோ ?. உணர்ச்சி உரைபடுமோ. ?