பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைத் தமிழ் எந்தம் தமிழணங்கின் இளமைப் பெருமிதத்தைச் சிந்தை உவந்தேற்கச் சேர்ந்துற்ற பெரியோரே! இந்தக் கவியரங்கில், எனைச் சார்ந்த புலவோரே! அந்தப் பழம் நாளில் ஆசிரியப் பெருந்தகையாய் எந்தன் தமிழார்வம் - 'என்றென்றும் ஏற்றமுறத் தந்த தமிழ் ஐயா! தலைவா!- நமஸ்காரம் ! நானோ - இருபத்தி ஏழாண்டு இன்னும் நிரம்பாத பருவத்து வாலிபன்' காண் ! பாவை தமிழ்க்குமரி கருவத்தே நிமிர்ந்தோங்கும் கட்டிளமைப் பேரெழிலை மருவத் துடிதுடிக்கும் மையல் மனத்தேன் நான்! என்னைப் போய்,