பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் ... .................... ......., அன்னவளின் உருவத் திருவழகை, உள்ளத்து வாலிபத்தைத் தருவாய் என ஆணை தந்திட்டீர்! என்றாலும் எங்கள் தமிழ்மொழியின் இளமை உGS:ரக்கின்றேன்; தங்கை அவள் பழகும் , நாகரீகம் சொல்லுகின்றேன்; உங்கள் செவி சாய்க்க உம் சாய்ப்பீர்! 2. கன்னித் தமிழரசி காலத்தால், இவ்வுலகின் முன்னை மொழிக் கெல்லாம் முந்தியவள் என்றாலும் பின்னைப் புதுமைக்கும் பெதும்பை இளம் பெண்ணாவாள் ! தொல்லைப் பழங்காலம் தொட்டு வழக்கறிந்த சொல்லுடையா ளானாலும் சோர்வும் தளர்வுணர்வும் இல்லாத புத்துணர்ச்சி இசைந்து, என்றென்றும் எல்லை கணித்தறியா இளமை நிறைந்திருப்பாள் !