பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 31 மாயப் புலவோர்கள் மருந்தீடும் செய்வினையும் ஆயதொரு பொய்ப்புலமை அநியாயம் செய்தாலும், வாயலுக்கக் கையளிக்க , வசைபாடி வந்தாலும், தூயவளாம் கன்னிமகள் தோற்றம் குறையாது காயகல்பம் உண்டதுபோல் கட்டுக் குலையாதாள் ! நங்கை யவள்- திங்கள் பிறைக்கொழுந்து திரியும் பொதிகையிலே . வங்கம் கவிழ்ந்ததென வழிந்தோடும் வெள்ளருவிக் கங்கைப் புதுப்புனலில் நீராடும் காரிகையாள்! கன்னிக் குமரிமுனைக் . கரிய பொடி.மணலைப் பின்னிமுறுக்கி, தலைப் பின்னலென மின்னவிடும் சின்னஞ் சிறு வயசுச் செல்வி தமிழ்க் கன்னிகையாள்! கொற்கைப் பதித்துறையில் கொழிக்கின்ற வெண்தரளம்