பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ரகுநாதன் பற்களெனக் கோத்தமைத்த பந்தியபினாள் எந்தேவி! குற்றாலக் சாரலிலே கொழித்துப் படர்தாவும் முற்றாக் கொடிமுல்லை மொக்குச் சரம்சூடிக் கற்றாரின் சிந்தையெலாம் கவராடும் காரிகையாள் ! தேனருவித் தூவானம் தெறிக்கும் கதிரொளியின் வானவில்லே மென்துகிலாய் வனைந்து புனைந்துவரும் கானத்துப் பொன்மயிலாய்க் களிக்குமொரு பூங்கொடியாள் ! காவரிப்பூம் பட்டினத்தில் கணிகை திருமாதவியாள் மேவும் தளிர்க்கரத்தால் மீட்டுமொரு யாழிசையே தேவி தமிழ்க்கன்னி திருவாய் மொழியானாள்! பல்லாண்டாய் நற்கவிக்குப் பணி செய்து அணிசெய்து சொல்லாண்டு பொருளாண்டு சொல்லிவைத்த காவியத்தின்