பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 33 எல்லாக் குமரியரும் எந்தமிழின் அவதாரம் ! வில்லாளன் சீராமன் வீதிவழி வர நோக்கி, நில்லாத கண்மணிகள் நிலைகுத்த, நின்றயர், புல்லாதே அவன்கண்ணைப் புசித்தும் பசியாற மெல்லியலாள் சீதையெனும் மிதிலை தவச்செல்வி ! மாமாயக் கண்ணனின்மேல் மால்கொண்டு, தன் தலையில், பூமாலை தனைச்சூடிப் Lௗகித்து, நமக்கெல்லாம் பாமாலை தனையளித்த பாவை திருப்பாவை! வண்டாடும் கண்ணாட, வாசமலர்ப் பந்தாட, செண்டாடும் குற்றாலச் செல்வி வசந்தவல்லி ! இச்சை அறிந்தவட்கு இனிக்கின்ற சேதியினைக் கொச்சைச் சிறுமொழியில் , குறிபார்த்துச் சொல்லுமந்த பச்சை மலைக் குறத்தி, பவளமலைக் குறச்சிங்கி! :