பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 35 ஓடிவிட்ட முயலெண்ணி ஒரு கோட்டை நீர் வடித்து, நாடியிலே கையூன்றி நவரத்ன ஒப்பாரி - பாடுகின்ற பழம்பத்தாம் பசலியரின் பக்கத்தே நாடி நெருங்காத நாயகியாள் தமிழ்க்கன்னி! மூச்சு விட்டால் மூச்செடுத்தால், முன்மோனை, பின்மோனை, பேச்சுக்கு முன்னூறு பிராச நயம்போட்டு வீசி விளாசுகின்ற விருதா வெறும் புலமை நீசத் திருக் குழுவின் நிழலில் ஒதுங்காதாள் ! கம்பன் காவியத்தின் கவிநயத்தைப் பாராமல், ' வம்பன் அவன் ! ஆரியர்க்கு வால் பிடித்தான்!' என்றெல்லாம் கும்பலிட்டு, தீக்கொளுத்திக் . கூட்டமிடும் பேர்வழியும், கையாளும் காதையினைக் கற்பனையென் றோராமல் மெய்யாய் அதை நம்பி மீசை துடிப்பாரும் " கூவி யழைத்தாலும் கூக்குரல்கள் இட்டாலும்