பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தமிழ்க் கவிதை பால்காலமாகப் பற்பல துறைகளில் பலவகையான பாவினங்களால் செழிப்புற்று வளர்ந்திருக் கிறது. இந்த நூற்றாண்டில் புதுவகையான பாவின மொன்று தமிழ் மக்கட்கு அறிமுகப்படுத்தப் பெற்று, வருகிறது. இந்தப் பாவினத்தைப்பற்றிய விளக்கத்தை ஆசிரியர், “புதுமைப்பித்தன் கவிதைகள் " என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் விரிவாக அறியலாம். ஆசிரியர் ரகுநாதன் அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். அதேமாதிரி “் திருச்சிற்றம்பலம் கவிராய” ரையும் தமிழ் மக்கள் அறிவார்கள். ஆனால் இரு வரும் ஒருவர் தான் என்பது பலருக்கு இதன் மூலந்தான் தெரியவரும். - இக் கவிதைத் தொகுதியின் இறுதியில் உள்ள குறிப்புக்கள் வாசகர்கட்குப் பெரிதும் பயன்படும். . இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்கட்களிதத் ஆசிரியருக்கு எங்கள் நன்றி. ஸ்டார் பிரசுரம்