பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் காவியத்து நாயகியாள் கண்ணெடுத்தும் பாராதாள் ! இவ்வாறாய்- ' நாடிவரும் பேரையெலாம் நச்சாது, நற்றமிழைப் . பாடி வளர்த்து வரும் பாவா ணரைச் சார்ந்து - மோடி கிறு கிறுக்கும் மோகினியாள் ! உலகுய்யப் பாடும் புலவருக்கே பாட்டின் உயிராவாள் ! வருத்தம், பசி, துன்பம் வாட்டுகின்ற காலத்தும், கருத்தில் தெளிவாற்றல் கவிதைப் பொருளமைதிப் பொருத்தம், பொருளாழம், பொய்யாத மெஞ்ஞானம், சிந்தனையில் முற்போக்கு, செயலில் துணிவாற்றல், எந்தெந்தக் காலத்தும் ஏற்ற புதுமை வழி- ஆன இவையெல்லாம் அழகாகக் கூடிவர, கூனுடைய பூமாந்தர். குறையெல்லாம் போக்கி, அவர் மானிடராய் வாழுமொரு மார்க்கம் தனை வகுக்கும் காரியத்தில் ஈடுபட்டுக் கவிதைப் பணி புரியும் -