பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று உற்ற பொருள் தேர்ந்து உலகத்து இயற்கைவளம் பற்றிக் கவியிசைத்துப் பாடவந்த பாவலரே! - மற்றுமுள பெரியோரே! உமக்கெல்லாம் சிற்றம்பலத்தான் நான் தெண்டனிட்டுச் செப்புகிறேன். கைக்குள் அடங்காத : காற்றை வசமாக்கிக் கைக்குள் அடக்கிக் கவியாக்கிக் கொண்டுவந்து. பாட்டை அவிழ்த்துவிடு பாவரங்கில் என்றாணை போட்டுவிட்டார் இந்தப் பொல்லாத செயலாளர். என்றாலும்- காற்றை வசமாக்கிக் கட்டிப் பிடித்துவர நேற்றை இரவுவரை நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும்...- சொல்லின் திருச் செல்வத் .