பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் காற்றின் புகழ்பாடிக் கவிதை இசைக்கின்றேன். அன்னவனோ-. பண்ணுருவ மாய்ச்சமைந்தான் பரம்பொருளான் என்றுலகோர் ' எண்ணி மயங்குகின்ற இயல்பைப்போல், கண்ணுக்குத் தெரியாதான் கைக்குள்ளும் சிக்காதான் விண் நிமிர்ந்து நின்றே விகசித்தான் என்றாலும்.. எங்கும் நிறைவாகி எல்லா உயிர்கட்கும் பொங்கும் அருள்சுரந்து புரந்து. உயிர்காப்பான்; தோன்றாப் பெருந்துணையாய்த் தோன்றி அருள் புரிவான். எனவேதான்- மண்ணுலகத் தோசையெலாம் வானவனாம் காற்றவனே பண்ணமுதம் போல் நமக்குப் பரிந்தளிப்பான் என்றுரைத்தான் விண்ணமுதம் போற் கவிதை விளம்புகவி பாரதியார். - தென்னன் பொதிகையிலே - தியங்கித் தயங்கியிள அன்ன நடைபயின்று அசைந்து அசைந்தாடி வாசப்பளி மலராம்