பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் வள்ளத்து நறுமணத்தை - வீசிச் சிதறிவரும். . விந்தை மிகுதென்றலிலே, தென்றல் மணத்தோடு திளைத்துக் களித்து வரும் என்றன் திருநெல்லை ஈன்ற கவிராஜன் - செப்பும் குறவஞ்சிச் சிந்தின் இனிமையிலே, மந்திரம் போல் சொல்வல்லான் மாமேதைக் கம்பன்து சுந்தரமாம் நற்கவியில் தோய்ந்திருக்கும் இசை நயத்தைத் தந்தியொடு சேர்த்திழைத்துத் தருகின்ற வேளையிலே, சீதக் குளிர்சுமந்து சிலிர்ந்து நடுநடுக்கும் ஊதைப் பெருவாடை உறுத்த, இளம்பெண்கள் உள்ளத்தே தீயேற உடம்பில் சுரமேற . விள்ளத் தெரியாத விரகத்தால் நாய்கரை உள்ளி உளமுருகி உணர்வின் உருக்குலைந்து அங்கொருவர் இங்கொருவர் ஆனதொரு மழைக்காலக் கங்குல் கொடுமையினைக் கவியாக்கிச் செவிவார்க்கும் .