பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் நந்திக் கலம்பகத்தின் நல்ல தமிழ்ப்பாட்டினிலே, கலம்பகத்தே இளநந்தி கனிந்தளிக்கும் கவிதையினைச் சிலம்பலும்பும் கனிமொழியார் . தேனிசையில் தேக்கையிலே, . செம்!மண் தமிழ்மணக்கும் சீருடைய காரைநகர் இம்மண் தனிலொலித்து எழுந்ததிமி ழோசையிலே செல்லச் சிறு குதலை சிந்தும் சிறு நகையில் " வெல்லத் தினிப்போடு " விளம்பும் மழலை மொழிச் சொல்லைச் செவிவாங்கிச் சுகம் காணும் வேளையிலே, நாற்றுப் பிடுங்கிநடும் . நங்கைமார் தம் நாவில் : ஊற்றுப் பெருக்கென்ன ஊறிவரும் கொச்சைமொழிப் பாட்டொலியை நம்முளத்தே பாய்ச்சிப் பரவசங்கள் மூட்டுகின்ற சிற்றாற்று முக்கூடற் பள்ளொலியில் இன்னபிற- எத்தனையோ ஓசைகளால் இன்பளிக்கும் காற்றவனாம்