பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 43 வித்தகனின் சித்தையெலாம் விளம்பற் கரிதாமோ ? இம்மட்டோ ? இங்கே நான், காற்றின் பெருமைகளைக் கவியாக்கிக் கூறுகின்ற கூற்றையெலாம் நம் செவிக்கே கொணர்வதுவும், என்முன்னே வீற்றிருக்கும் ஒலிவாங்கி மின்கருவி வாய்வழியே ஊற்றி உருமாற்றி - ஊரூராய் ஒலிபரப்பிச் சாற்றுவதும், காற்றவனின் சக்தி மகத்துவம்தான் ! இவ்வாறாய்- வானவனாம் அன்னவனின் . வளர்ந்த நிறையுருவை ஊனச் சிறு கண்ணால் உணர்ந்தறிய ஏலாதேம் ஆனாலும், கண்ணிரண்டால் - கண்டறிய அன்னவன் தன் கருணைத் திருவுருவை உண்டறிவோம் ; நம் மூச்சில் உயிர்த்தறிவோம் ; நம் பேச்சில் விண்டறிவோம் ; நம் மேனி வெதுவெதுப்பில் குதுகுதுப்பில் கண்டறிவேரம் ; சிந்தை "களிப்படைவோம்.