பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் நாடு நமஸ்காரம். அன்பார்ந்த பெரியோரே ! அரங்கோரே ! நம் நாட்டின் பண்பார்ந்த செந்தமிழன் பாவலரே ! ஒரு வார்த்தை . போன நவம்பர் தனில் . பொருள் குறித்து, எந்தனுக்கு வானொலியார் அரங்குக்கு வளமான நற்கவியைத் தேனொழுக, உங்கள் மனம் தித்திக்க, மகிழ்வூற நானெழுத வேண்டுமென நாளும் குறித்து விட்டார், நானோ - பேனா பிடிச் செழுதிப் பேரெடுத்து அரசாளும் " தானா பதி அல்ல. . ஆனாலும், நம் நாட்டை அறைகின்றேன் கேளுங்கள் !