பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் காடுகளாய் மலை மேடுகளாய் எங்கும் காணக் கிடந்த இப்பூ வுலகை மேடு திருத்தியே கன்னலும் செந்நெலும் , விம்மி விளைந்திடச் செய்தவர் நாம், - ல் மாலையிள வெயிற் கோலத்திலே மழை .. வானவில்லின் ஏழு வண்ணத்திலே நூலைத் திரித்ததும் சேலைகள் நெய் ததும் நூற்றுக்கணக்கில் குவித்ததும் நாம். வெற்பின் இமகிரி போல் நிமிர்ந்து விண்ணின் மேகம் கிழிபட நீண்டுயர்ந்த அற்புதக் கோபுரக் கூடமும் மாடமும் ஆக்கிப் படைத்தவர் நாம், அவர் நாம். ல் ஆழ நெடுங் கடற் பேழைக்குள்ளே தவழ் ஆயிர மாயிரம் முத்தினத்தை மீளக் கொணர்ந்து குவித்தவர் நாம் ; ஒளி மின்னும் சரங்களாய்க் கோத்தவர் நாம்.

மின்னற் கொடித்திறள் என்னப் பளிச்சிட்டு வெட்டி மினுக்கும் நவமணியை கன்னங் கரிய நிலக்கரியை, தங்கக் கட்டியை வெட்டி எடுத்தவர். நாம்.. வண்ண மலர்க்குலம் புன்னகைக்கும் கரு வண்டுக் குலம் மது உண்டுறங்கும்