பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன்

2. நம் நாட்டில்- வெள்ளி மலை உருகி வீழ்ந்தென்ன, வெள்ளருவி துள்ளி விழுந்திறங்கித் துயரம் களைந்துவரும் வெள்ளப் பெருக்கத்தை, வியன் கங்கை ஆற்றொழுக்கின் வள்ளற் பெருந்தனத்தை வரசாம் கோசரமாய்க் கொள்ளை மகிழ்ச்சி தரக் கூறிடவும் திறமுண்டு! என்றாலும்- - குறைவற்ற செல்வங்கள் குவிந்தும், வயற்புறத்தில் நிறை வயிற்றுச் சூலியைப்போல் நெற்கதிர்கள் தலைசாய்த்தும், அரை வயிற்றுக் கஞ்சிக்கும் ஆலாய்ப் பறக்கின்ற குறைவயிற்று ஏழைகளைக் கூறாதிருந்திடவோ ? ஆறுண்டு, குளமுண்டு, அணியணியாய் நெல்வயல்கள் வீறுடனே ஒளிபரப்பி விளைவ துண்டு! என்றாலும் சோறுண்டோ ? வாழ்வில் சுக முண்டோ ? இதையெல்லாம் கூறாதிருந்து விட்டால் குறை விழுந்து போகாதோ ?