பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 47 விண்காட்டும் விரலென்ன, விமலன் திருவடியைக் கண்காட்டும் அருட்சோதிக் கதிரென்ன நிமிர்ந்தோங்கும் மண் கோட்டைக் கோபுரத்தை, மதிமயக்கும் மாடத்தை , கல்லைக்கணியாக்கிக் கவிப்பொருளை உருவாக்கும். மல்லைக் கடற்கரையின் 1. Dானுடத்தின் வெற்றிதனைச் சொல்லைக் குழைத்தெடுத்து சொக்கும் கவிதீட்ட எல்லையற்ற பேராவல் எனக்குண்டு! என்றாலும், வானுயர்ந்த மாடங்கள் வளர்ந்தும், குடியிருக்கச் சாணிலமும் இல்லாமல் சந்துகளில் பொந்துகளில் கூனிக் கிடந்துழன்றுக் குற்றுயிராய் வாழ்வதையும் ஆணித் தரமாக அறையா திருந்திடவோ ? வானத்து வில்லழகின் வண்ணத்தை, தினைப்புனத்துக்