பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கான மயில்தோகைக் கண்ணாயிரங் கோடி , மீனக் குலத்துடிப்பை, மின்னொளியை ஒன்றாக்கி, பஞ்சுப் புகைஉலைத்து, பனிப் புகை போல் நூல் நூற்று மஞ்சு வண்ணத் தன்மையிலே மஸ்லின் துணி நெய்த கஞ்சமலர்க் கரத்தைக் கண்ணொற்றிப் புகழ்ந்திடவும் நெஞ்சில் இடமுண்டு ! இன்றைக்கோ- அஞ்சு கஜத் துணிக்கும் அடித்துப் புரண்டோடிக் கெஞ்சுவதை, கலி சூழ்ந்து கேடுற்ற நளனைப்போல் கொஞ்சத் துணி யுடுத்துக் குன்றி யுடல் தாங்குவதைச் செஞ்சொற் கவியரங்கில் செப்பா திருந்திடவோ ? . தொட்டுத் தாலிகட்டித் துணையான நாயகர்க்குக் கட்டுக் கடங்கி, அவர் கற்பின் திறம் காத்து மட்டற்ற வலிபெற்று மதுரை நகர் சுட்டெரித்த கண்ணகியை, கதிரோனின் கருமத்தைத் தடைசெய்த