பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 49 பெண்ணரசி நளாயினியின் பேரறத்தை, அருந்ததியாள் விண்ணரங்கில் இடம்பெற்ற வென்றி எடுத்துரைத்து, கற்புக் கதை சொல்லிக் கவி கூறத் திறமுண்டு! இன்றைக்கோ?- பாரதத்துப் பொற்கிளிகள் தம்முடலைப் பொருளுக்காய், அரிசிக்காய், அற்பர்களின் இச்சை வெறி ஆசை தணிப்பதற்காய் விற்கின்றனர் ! பிச்சை விழைகின்றார் ? இதையொல்லாம் சொற்களிலே தீட்டாமல் சும்மா இருந்திடவோ ? பா-அதே கி : அடிமை வெள்ளையரின் ஆட்சிக்கு வேட்டு வைத்து, அடிமையெனும் பள்ளத்தே கிடந்துழன்ற பாரதத்தை விழிப்பூட்டி, உள்ளக் கனல் ஏற்றி உதிரப் புனல் பெருகும் வெள்ளத்தே முங்குளித்து வெளிக் கொணர்ந்த விடுதலையைத் துள்ளும் கவி மொழியால் ' தொழுதேற்ற ஆசையுண்டு! - என்றாலும்- கள் லக் கடை நடத்தக்