பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கச்சை கட்டும் பாவியர்கள் வெள்ளை மனத்தவர் போல் வெளிவேஷம் போட்டாடிக் : கொள்ளையடித்து, தினம் - கொழுக்கின்ற சூழ்வினைக்கும்' பள்ளம் பறிப்பதற்கோர் பாட்டெழுதா திருந்திடவோ ? பன்னூறு காலமதாய் பருவ நலம் குலையாத கன்னித் தமிழ்மகளின் காதல் திருமகனாம் பன்னீ ராயிரத்துப் பாட்டெழுதிப் புகழ்பெற்ற பாவலனை, ஈரடியில் பாரையெலாம் அளந்தறிந்த நாவலனாம் வள்ளுவனை, பாரதத்துத் தீமையெலாம் பறந்தோட, அன்னியரின் வேரதிரப் பாட்டெழுதி .. வீரம் விளைத்தவனாம் பாரதியின் கவித்திறத்தைப் பைந்தமிழில் சொல்லுதற்கும் ஆராத பேராவல். ஆசை எனக்குண்டு! என்றாலும்-- இன்றைக்குச்