பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கவிதைகள் - கா -- - - -:- -பயா செங்கல் அடுக்கி, தமிழ்ச் செய்யுள் என்று கூறி நமைப் பொங்கல் வைக்க வரும் புல்லுருவிக் கூட்டத்தை, தங்கக் கவியெனவே தமுக்கடித்துச் சொல்லி வரும் வெங்கத் திருக் குழுவை வீடு பெறச் செய்வதற்கும் கங்கெரியும் வார்த்தைகளில் கவிகூரா திருந்திடவோ ? - இப்படியாய்' பண்டு தொட்டு வழங்கும் " பாரதத்துப் பெருமையெலாம் வண்டு கட்டிக் கொண்டு வந்தே வைத்தாலும், அவையெல்லாம் பிண்டு விழுகுதையோ! பெரியோரே ! என்செய்வேன் ? - ஆதலினால்- எந்தன் திருநாட்டின் இயல்பையெலாம் உங்களுடைச் . சிந்தைக்கே விட்டுவிட்டுச் செல்கின்றேன் ! வாக்களித்த அந்தப் பரிசு தனை அடியேனுக்குடன் ஈந்து வந்த வழி மீளுதற்கு வகை செய்து தாருமையா! - 1948