பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்றுவரும் நம்மவரின் வீரம் பிழிந்து வந்தார். அந்தப் பெருஞ் சுமையை அகற்ற, நம் நாட்டைச் சொந்தமென ஆக்கிப் பின் சுகம்தேட, நம்மவர்கள் செங்குருதிப் புனல்வெள்ளம், சிறை வாசம், சித்ரவதை, தொங்கும் கயிற்றினிலே தூக்கு எனப் பலவாம் " வேதனைக்கு ஆளாகி, வெற்றி குறிக்கோளாகிச் சாதனையில் வெற்றிபெற்றார் ; '. சாகா வரம் பெற்றார். நந்தம் சுதந்திரத்தை நாட்டி விட்ட அன்னவர்க்கு வந்தனைகள் செய்தின்று "வாழ்த்திடுவோம். ஆனாலும்.- பேரரசைப் போராடிப் " பெற்றாலும், அடிமைதனை வேரோடு பேர்த்தெறிந்து வெட்டிக் களைந்தோமோ ? பூரணமாம் விடுதலைக்குப் பொருளும்தான் என்னேயோ ? உடுக்கத் துணிமணியும் உண்ண நிறை யுணவும்