பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன்: படுக்கத் தனி நிழலும் பாங்கில் உடனமைய, நெஞ்சில் நினைப்பில் நெறிமுறையில் நல்வாழ்வில் நஞ்க கலவாமல் நாமெல்லாம் ஓர் குடியாய் எல்லோரும் இந்நாட்டின் இளங்கோவாய்; ஆண்டானாய், நல்லோர். குடிவாழ்க்கை நாட்டுவதே. சுதந்திரமாம். இன்றைக்கோ - வான வெளிமுகடாய், மண்தரையே பாயலெனக் கூனி, உடல் தாங்கிக் குன்றும் படைசனங்கள் நெற்றி வியர்வைதனை நீராக்கி, நெல்லாக்கிக் குற்றுயிராய் வாழ்ந்து பசிக் கும்பி கொதிப்பதையும், அவ்வேளை- உண்டு தினம் உறங்கி, உறுத்தாத பஞ்சு மெத்தைத் திண்டு சுகம் கொடுக்கத் திளைக்கின்ற பணக்காரர் ஊரான் உழைப்பதனை உறிஞ்சி யுயிர் வாழ்வதையும். வட்டிக் கடன் கொடுத்து வாய்தா கழிந்துவிட்டால்