பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் கட்டிவச்சிக் காசைக் கற்ப்பதையும், இருப்பில் உணவிருக்க இருட்டில் பதுக்கிவைத்துக் கருப்புக் கடை நடத்திக் காசுதனைச் சேர்த்தோன் உருப்படியாய் நம்முன்னே உலா வந்து போவதையும், ஆலைத் துணிப் பெருக்கு அலையலையாய் வந்தாலும் சேலை துணி மணிக்குத் திண்டாடி வாடுவதும், மானம் தனை மறைக்க, 1பழைக்குளிரைத் தான் தடுக்கச் 'சாணகலத் துணியின்றி மக்கள் பலர் சாவதையும், ஆதிமுதல் நம்மவர்க்கு அகிம்சை தெறி கூறிவந்த சூதறியாக் காந்தி மகான் " சுடப்பட்டு மாய்ந்ததையும், போதிமரப் புத்தனைப்போல் போ தம் புகன்றவனைச் சாதி மத பேதச் சழக்கர் உயிர் வாங்கியதும், செல்லாகி விட்டபின்னர் சீவனிழக் காதவர்போல் பொல்லாச் செயல் புரிந்து