பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிக் பெலம் கண்ணைக் கவர்ந்திடும் பண்ணையைத் தேமலர்க் காவனத்தை ஆக்கித் தந்தவர் நாம், கங்கு உரையாற்றுப் பொங்கி மதம் கொளும் காட்டு நதிகளைக் கால் திருத்தி அங்குசம் போலனை தேக்கியே மா நிலம் .. 'பாவும் புரந்திடச் செய்தவர் நாம். மாயிகுட். பாதலப் பாறைச் சிறைக்குள்ளே மண்டியெழும் எண்ணெய் வாரி கண்டு" ஆயிர (மாயிரம் எந்திரத்தால் பொருள் . அல்லும் பகலும் படைத்தவர் நாம். கந்தகு வர்குலச் சுந்தரர் போலவும் - கற்பனை வேகத்தி னற்புதம் போலவும் அந்தர வெண்முகில் மண்டலத்தே செலும் ஆகாச வாகனம் செய்தவர் நாம். கல்லையும் நீரையும் காற்றையும் தீயையும் கண்டவர் நாம் ; வெற்றி கொண்டவர் நாம் ; கொல்ல வரும் பஞ்ச பூதமும் எம்முனே கும்பிட்டு வாழ்ந்திடச் செய்தவர் நாம். 'எண்ணும் கணக்கும் இறந்தொழிந்தாலென எண்ணிற் பலப்பல விந்தையெலாம் , பண்ணிய மானிடச் சாதியும் நாம்; இந்தப் 1.ாரிற் படைப்புக் கடவுளர் நாம். வையம் தழைத்திடச் செய்தவர் நாம் ; புவி வாழ்வை ஒளிபெறச் செய்தவர் நாம். ஐயம் திரிபு சந்தேக மின்றி உல கரளப் பிறந்தவர் நாம், அவர் நாம்!