பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ரகுநாதன் போர்முரசம் கொட்டுகின்ற சிற்றரசர் தம் கூட்டம் சீறுவதும், மக்கள்தமைக் குற்றுயிராய்த் துன்புறுத்திக் குடலுருவிச் சூடுவதும், இப்படியாய்- எத்தனையோ காட்சிகளை இன்றளவும் காண்கின்றோம். விதவிதமாய்த் துன்பங்கள் விளைவதுவே பூரணமாம் சுதந்திரத்தின் தன்மைகளோ ?' சொல்லிடுவீர் அரங்கோரே ! ஆகையினால்- அழுக்குப் படியாமல் அணிகள் புனைந்து வந்து தளுக்குத் தனம் பண்ணும் சங்காத்தம் போதுமையா. நம் நாட்டில்-- பாடுபடும் பாட்டாளி பசிதீர்க்க, உச்சி வெயில் ஒடு பிளந்தெறிய உழைக்கின்ற விவசாயி வீடு செழிக்க; விளக் கேற்ற, மக்கள் வலிமையினை மதியாத குறுமன்னர்